ஜனநாயகம் பற்றி எங்களுக்கு யாரும் பாடம் எடுக்க அவசியமில்லை- ஐ.நா.வில் இந்திய தூதர் அதிரடி

ஜனநாயகம் குறித்து இந்தியாவுக்கு யாரும் பாடம் எடுக்க அவசியமில்லை என  ஐ.நாவில் இந்தயாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் தெரிவித்துள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 2021 மற்றும் 2022 ஆகிய 2 ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்…

ஜனநாயகம் குறித்து இந்தியாவுக்கு யாரும் பாடம் எடுக்க அவசியமில்லை என  ஐ.நாவில் இந்தயாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 2021 மற்றும் 2022 ஆகிய 2 ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப் பட்ட உறுப்பினராக இந்தியா செயல்பட்டு வருகிறது. மாதந்தோறும் பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை ஒவ்வொரு நாடும் சுழற்சி முறையில் வகித்து வருகின்றன.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்தியா தலைவராக இருந்தது. இந்தநிலையில், நடப்பு டிசம்பர் மாதத்துக்கு இந்தியா மீண்டும் தலைவர் ஆகியுள்ளது. ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் பதவியேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ருச்சிரா காம்போஜ், சமீப காலமாக பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் சர்வதேச அளவில் இந்தியா மீது குற்றச்சாட்டுக்களை வைத்து வருகின்றன. காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாகவும், சிறுபான்மையினருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பபடுவதாகவும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. ஐ.நாவிலும் கூட இதுபோன்று முன்பு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

உலகிலேயே இந்தியா தான் முதலில் நாகரீமடைந்த நாடு. இந்தியா பழம்பெருமை வாய்ந்த தேசம். இந்திய ஜனநாயகத்தின் வேர்கள் 2500 ஆண்டுகளுக்கு முந்தையது. நாங்கள் எப்போதுமே ஜனநாயகமாகத் தான் இருந்துள்ளோம். அண்மைக் காலத்தை எடுத்துக் கொண்டாலும் ஜனநாயகத்தின் 4 தூண்களும் வலுவாக இருக்கின்றன. இந்தியாவில் சமூக ஊடகங்கள் கூட சுதந்திரமாக தான் இருக்கிறது.

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தலும் முறையாக நடந்து வருகிறது. எங்கள் நாட்டில் யார் வேண்டுமானாலும் அவர்கள் மனதில் இருப்பதை சொல்லும் உரிமை இருக்கின்றது. எனவே ஜனநாயகம் குறித்து எங்களுக்கு யாரும் பாடம் எடுக்க அவசியம் ஏற்படவில்லை என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.