அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் புதுமைப் பெண் திட்டம் – நிதியமைச்சர் தங்கம் தென்னரசு!

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் புதுமைப் பெண் திட்டம் விரிவுபடுத்தப்படும் என பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.  தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர்…

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் புதுமைப் பெண் திட்டம் விரிவுபடுத்தப்படும் என பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். 

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த பிப். 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார்.

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் முத்திரை சின்னத்துடன் அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் இன்று (பிப். 19) காலை 10 மணிக்கு கூடியது.  

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வருகை தந்தார். அவரை சந்தித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வாழ்த்து பெற்றார். அதன்பின், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையின் தொடக்கத்தில் காட்சிக்கு எளிமையும்,  கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும் என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையை தொடங்கினார்.

தொடர்ந்து உரையாற்றிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கப்படும் என கூறினார்.

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு பதவியேற்றதும் அறிமுகப்படுத்தப்பட்ட மகளிர் இலவச பேருந்து பயணம் திட்டம் மலைப்பகுதிகளான நீலகிரி,  கொடைக்கான்ல் மற்றும் வால்பறை போன்ற பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படுவதாக தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.  மகளிர் உரிமைத் திட்டத்திற்காக இந்த ஆண்டு ரூ. 13,720 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.