மெரினா கடற்கரையில் கிடந்த ஐம்பொன் பைரவர் சிலை – போலீசார் தீவிர விசாரணை!

சென்னை மெரினா கடற்கரையில்,  ஐம்பொன்னால் ஆன பைரவர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு பின்புறம்,  கடற்கரை பகுதியில் சாமி சிலை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இந்த சிலையை…

சென்னை மெரினா கடற்கரையில்,  ஐம்பொன்னால் ஆன பைரவர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு பின்புறம்,  கடற்கரை பகுதியில் சாமி சிலை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இந்த சிலையை கடலோர பாதுகாப்பு குழுமத்தைச் சேர்ந்த காவலர்கள் கண்டெடுத்தனர்.  அது 1 அடி உயரமுள்ள ஐம்பொன்னால் ஆன பைரவர் சிலை என்று தெரியவந்துள்ளது.

 

இந்த சிலை மெரினா கடலோர காவல் படை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்து தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.  மேலும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த சிலை எந்த கோயிலுக்கு சொந்தமானது? கடத்தல் சிலையா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.