தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு

5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தத்தை தமிழக அரசு கோரியுள்ளது. கொரோனா 2-வது அலையின் தாக்கத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்துள்ளது. அதே நேரம், 18 வயது…

5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தத்தை தமிழக அரசு கோரியுள்ளது.

கொரோனா 2-வது அலையின் தாக்கத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்துள்ளது. அதே நேரம், 18 வயது முதல் 45 வயது உள்ளவர்களுக்கு, மாநில அரசுகளே தடுப்பூசிகளை கொள்முதல் செய்து பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இதையடுத்து கொரோனா தடுப்பூசி வாங்குவதற்கான உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி தமிழக அரசால் கோரப்பட்டது. இந்த உலகளாவிய ஒப்பந்தம் மூலம் 5 கோடி தடுப்பூசிகளை தமிழக அரசு வாங்கவுள்ளது. 5 கோடி தடுப்பூசிகளை 90 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என ஒப்பந்தப்புள்ளியில் தமிழக அரசு நிபந்தனையும் விதித்துள்ளது.

ஜூன் 5-ம் தேதிக்குள் நிறுவனங்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய ஒப்பந்தம் மூலம் அடுத்த 3 மாதங்களுக்குள் தமிழகத்திற்கு 5 கோடி கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.