3வது அலையை எதிர்கொள்ள தயாராகி வருகிறோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 3வது அலையை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ம.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் கல்யாணமகாதேவி கொரோனா தடுப்பூசி போடும் முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுற்றுச் சூழல் துறை அமைச்சர்…

தமிழகத்தில் 3வது அலையை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ம.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் கல்யாணமகாதேவி கொரோனா தடுப்பூசி போடும் முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோர் தொடங்கிவைத்தனர். தடுப்பூசி போட்டவர்களுக்கு அதற்கான சான்றிதழையும் வழங்கினர்.

திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் ஆக்ஸிஜன் படுக்கைகள் தயார்படுத்தும் பணிகளையும், குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவுக்காக கட்டப்பட்டுவரும் கட்டிட பணிகளை அமைச்சர்கள் பார்வையிட்டனர். பின்னர், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திலும் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிக்கு பேட்டியளித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், “இதுவரை தமழிகத்திற்கு 1,16,57,690 தடுப்பூசிகள் வந்துள்ளன. அதில், இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகள் எண்ணிக்கை 1,10,34,760. கையிருப்பில் 3,44,342 தடுப்பூசி மருந்துகள் உள்ளன. தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் உட்பட அனைவருக்கும் இரண்டு தவனை தடுப்பசி போடுவதற்கு 11. 36 கோடி தடுப்பூசி மருந்துகள் தேவை. அந்த வகையில் தற்போது 10.20 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகிறது” என்று தெரிவித்தார்.
கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள தமிழகம் தயாராகி வருவதாக தெரிவித்த அமைச்சர், அனைத்து ஆக்சிஜன் வசதியுடன் கூடிய அரசு மருத்துவமனைகளிலும் 40,000 படுக்கைகள் காலியாக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அரசு மருத்துவமனைகள், அனைத்து தனியார் சேவை மையங்கள், சித்தா, யுனானி, ஹோமியோபதி உள்பட அனைத்து இடங்களில் 1 லட்சம் படுக்கைகள் தயாராகி வருகிறது என்றார். அதேபோல் அனைத்து மருத்துவ மனைகளிலும் தனியாக குழந்தைகள் சிகிச்சை பிரிவு,குழந்தைகளுக்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.