முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

விஜய் பிறந்தநாளில் “தளபதி 66” அறிவிப்பு?

நடிகர் விஜய்யின் பிறந்த நாளன்று ‘தளபதி 66’ படம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. ‘தளபதி 66’ படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்க இருப்பதாகவும், படத்தை தில் ராஜு தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தலபதி விஜய் கோலிவுட்டில் அறிமுகமாகி பல ஆண்டுகளாக தனக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாக்கியுள்ளார். இன்றளவிலும் அவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். இன்றும் மில்லியன் கணக்கான இதயங்களை தன் படத்தின் மூலம் கவர அவர் மறப்பதில்லை.

விஜய் பிறந்தநாளை அவரின் ரசிகர்கள் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம், ஆனால் கடந்த ஆண்டு கொரோனா முதல் அலை காரணமாக விஜய் தனது ரசிகர்களிடம் தன் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த ஆண்டு தளபதி விஜய், ஜூன் 22 ஆம் தேதி தனது 47 வது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், தளபதியின் ரசிகர்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வாயிலாக விஜய்யின் பிறந்தநாளை கொண்டாட தயாராக உள்ளனர். ​​இணையத்தில் பரவி வரும் தகவல்களின்படி, ‘தளபதி 66’ படம் தொடர்பான அறிவிப்பு அவர் பிறந்த நாளன்று வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. அந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்க இருப்பதாகவும் தில் ராஜு படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ‘தளபதி 65’ படத்தில் விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார், மேலும் இதில் அபர்ணா தாஸ், யோகி பாபு உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படப்பிடிப்பின் முதல் பாதி ஜார்ஜியாவில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படக்குழு அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னையில் படமாக்க உள்ளது.. அனிருத் இசையமைக்கிறார், படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

Advertisement:
SHARE

Related posts

வேளாண் சட்டங்களை திரும்பபெற வேண்டும்: முதல்வர்!

முழு ஊரடங்கால் கொரோனா பாதிப்பு குறைவு : அரவிந்த் கெஜ்ரிவால்

Jeba Arul Robinson

தமிழகத்தில் 4 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

Halley karthi