சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள கலைவாணர் அரங்கில் சபாநாயகர் அப்பாவு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 21ஆம் தேதி காலை 10 மணிக்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் என பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்திருந்தார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், கூட்டத்தொடர் நடைபெறவுள்ள சென்னை கலைவாணர் அரங்கில் சபாநாயகர் அப்பாவு இன்று ஆய்வு செய்தார். பேரவை கூட்டத்தொடர் முன்னேற்பாடுகள் தொடர்பாகவும், தற்காலிக இருக்கை அமைப்பது குறித்தும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது துணை சபாநாயகர் பிச்சாண்டி மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
…..







