தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சுபகிருது ஆண்டு நிறைவடைந்து சித்திரை முதல் நாளான சோபகிருது ஆண்டு துவங்கிய நிலையில் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தமிழ்புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
பழனி முருகன் மலைக்கோவில் இன்று அதிகாலை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
—ரூபி.காமராஜ்







