சித்திரை கனியை முன்னிட்டு தண்டுமாரியம்மனுக்கு கொரோனா நீங்க சிறப்பு பூஜை 21 வகை பழங்ளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
சித்திரை கனியை முன்னிட்டு கோவையில் உள்ள கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவு காணப்பட்டது. குறிப்பாக கோவையில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு தண்டுமாரியம்மன் கோவிலில் அதிகளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். தண்டுமாரியம்மனுக்கு 21 வகை பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நடை முழுவதும் தோரணங்கள் பழங்களால் அலங்கரிக்கப்பட்டது.
அம்மனுக்கு அதிகாலை முதலே தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மேலும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் கொரோனா தொற்று நீங்கவும், மக்கள் நோய் நொடி இல்லாமல் வாழவும், மழை பெய்து விவசாயம் செழிக்கவும், சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு தரிசனம் செய்தனர்.
—அனகா காளமேகன்







