“தமிழக தொழில்துறை தோல்வியடைந்து விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

நமது தொழில்துறை இயந்திரம் செயலிழந்துவிட்டது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தொழில்துறை தோல்வி அடைந்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

“திமுக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களைத் தாண்டிச் செல்லத் தவறியதால், நமது தொழில்துறை இயந்திரம் செயலிழந்து போயுள்ளது. நமது தொழில்முனைவோர் காத்திருக்கிறார்கள். நமது இளைஞர்கள் இடம்பெயர்கிறார்கள். நமது முதலீட்டாளர்கள் வேறு இடத்திற்கு செல்கிறார்கள்.

இதை மாற்ற அதிமுக உறுதிபூண்டுள்ளது. இந்தியாவின் அடுத்த கட்ட தொழில்துறை வளர்ச்சிக்கு தமிழ்நாடு தலைமை தாங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இதுவே சரியான நேரம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.