முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

தமிழ்நாட்டில் மேலும் குறைந்தது கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் புதிதாக 1,152 பேருக்கு கொரோனா தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,152 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,92,949 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 19 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,987 ஆக அதிகரித்துள்ளது. தொற்றிலிருந்து ஒரே நாளில் 1,392 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,43,431 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் தற்போது 13,531 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டங்களில், சென்னை மற்றும் கோவையில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 147 பேருக்கு தொற்றுப் பாதித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளனர். 168 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

கோயமுத்தூரில் 140 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் 100-க்கும் குறைவானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துவிட்டு இளம்பெண் தற்கொலை !

Vandhana

“எனக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணி” – பிரேமலதா விஜயகாந்த

Jayapriya

சிவசங்கர் பாபாவுக்கு 3 நாள் சிபிசிஐடி காவல்