முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழக ஆளுநர் பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளராக செயல்படுகிறார் -எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா

தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக செயல்படுகிறார் என பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

பாபநாசம் சட்டமன்ற உறுப்பினரும்,தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவருமான
ஜவாஹிருல்லா இன்று இரவு பாபநாசத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது,
திராவிட இயக்க ஆட்சிகளால் தமிழ்நாடு ஏமாற்றப்பட்டிருப்பதாக சமீபத்தில் தமிழக
ஆளுநர், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்திருப்பது
கண்டிக்கத்தக்கது என பேசினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அத்துடன், பாஜக ஆளும் மாநிலங்களை விட இந்தியாவில் அதிக அளவில் கல்வி கற்றவர்கள் அதிகம் உள்ள பகுதியாகவும் தொழில்துறையில் வளர்ச்சி அடைந்த
மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள்
ஆண்ட கேரளாவிலும் கல்வி வளர்ச்சியில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சமூக நீதிக் கொள்கையினால் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் தமிழகம் முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது.
இந்நிலையில் திராவிட இயக்க ஆட்சியினால் தமிழக மக்கள் ஏமாற்றப்பட்டு இருப்பதாக
தமிழக ஆளுநர் சமீபத்தில் ஆளுநர் மாளிகையில் கூறி இருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழக ஆளுநர் ரவி பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளராகவே செயல்படுகிறார்.
ஆளுநர் மாளிகையை துஷ்பிரயோகம் செய்கிறார் என்றும் ஜவாஹிருல்லா
தெரிவித்தார்.


அத்துடன்,  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் நடந்து கொண்ட முறை கண்டிக்கத்தக்கது என்றும் ஜவாஹிருல்லா மேலும் தெரிவித்தார். பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுந்தரபெருமாள் கோவில் பகுதியில் அதிக அளவில் மலர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பகுதி மலர் சாகுபடி செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் சுந்தரபெருமாள் கோவில் பகுதியில் மலர் வணிக வளாகம் விரைவில் அமைக்கப்படும். அதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

மேலும், திருமண்டங்குடி திருஆருரான் சர்க்கரை ஆலை அதன் நிர்வாகத்தால் ஏமாற்றப்பட்ட கரும்பு விவசாயிகளின் இன்னல்கள் களைய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், ஜவாஹிருல்லா மேலும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகத்தின் தலைவராக தமிழர் ஒருவர் தேர்வு!

Gayathri Venkatesan

ஏக்நாத் ஷிண்டேவை ஆதரிக்கும் 42 எம்எல்ஏ-க்கள்

Mohan Dass

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

Web Editor