சேலம் 8 வழி சாலை திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை – மத்திய அரசு

சென்னை – சேலம் 8 வழி சாலை திட்டத்துக்கு தமிழக அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மாநிலங்களவையில் உறுப்பினர் அன்புமணி ராமதாஸ், மத்திய அரசின் “பாரத்மாலா பிரயோஜனா”…

சென்னை – சேலம் 8 வழி சாலை திட்டத்துக்கு தமிழக அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மாநிலங்களவையில் உறுப்பினர் அன்புமணி ராமதாஸ், மத்திய அரசின் “பாரத்மாலா பிரயோஜனா” திட்டத்தின் கீழ் சென்னை-சேலம் இடையே 277.33 கிலோமீட்டர் நீளமுள்ள சாலையை அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய அரசுக்கு ஏதேனும் விண்ணப்பம் கிடைத்துள்ளதா? என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், இத்திட்டத்திற்கு தமிழக அரசிடம் இருந்து எதிர்ப்பு ஏதேனும் மத்திய அரசுக்கு கிடைத்துள்ளதா? என கேள்வி எழுப்பியிருந்தார்.

அண்மைச் செய்தி:பல்வேறு தடைகளை தாண்டி நடராஜன் மீண்டும் இந்திய அணியில் இடம் பெறுவார் – முன்னாள் வீரர் பாலாஜி நம்பிக்கை

அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில்ளித்துள்ள மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, சென்னை-சேலம் இடையிலான 277.33 கிலோமீட்டர் நீளமுள்ள 8 வழி சாலை திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய அரசுக்கு எந்த ஒரு விண்ணப்பமும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் இத்திட்டத்திற்கு தமிழக அரசிடம் இருந்து எந்த ஒரு எதிர்ப்பும் வரவில்லை எனவும் எழுத்துப்பூர்வ பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.