நடராஜன் மீண்டும் இந்திய அணியில் இடம் பெறுவார் – முன்னாள் வீரர் பாலாஜி நம்பிக்கை

வேகப்பந்துவீச்சாளர்களுக்கு காயம் ஏற்படுவது தடுக்க முடியாதது என்றும் பல்வேறு தடைகளை தாண்டி வந்த தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் நடராஜன் மீண்டும் இந்திய அணியில் இடம் பெறுவார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து…

வேகப்பந்துவீச்சாளர்களுக்கு காயம் ஏற்படுவது தடுக்க முடியாதது என்றும் பல்வேறு
தடைகளை தாண்டி வந்த தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் நடராஜன் மீண்டும் இந்திய அணியில் இடம் பெறுவார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பாலாஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அகாடமி துவக்க விழா திருநெல்வேலி சங்கர் நகரில்
நடைபெற்றது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகபந்துவீச்சாளர்
பாலாஜி கலந்து கொண்டு அகாடமியை தொடங்கி வைத்தார். அதன்  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது..

“ தற்போதைய நிலையில் கிராமங்களில் இருந்து கிரிக்கெட் வீரர்கள் அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறார்கள். தற்போதைய இந்திய அணி மிகச் சிறந்த அணியாக இருக்கிறது. காயம் காரணமாக இந்திய அணியில் இடம் பெற முடியாமல் தவித்து வரும்  நடராஜன் கடந்து வந்த பாதை மிகப் பெரியது.  அதுவே அவருக்கான வெற்றி.

இதனையும் படியுங்கள்: ”நாட்டு நாட்டு” இசையுடன் அஸ்வின், ஜடேஜா பரிசை பங்கு பிரித்து ரகளை – வைரல் வீடியோ

காயங்களால் அவதிப்படும் அவர் அதை தாண்டி மீண்டும் இந்திய அணியில் இடம் பெறுவார். வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் அடைவது தடுக்க முடியாத ஒன்று. அத்தகைய சூழலில் தான் தற்போது நடராஜன் இருக்கிறார். அவர் மீண்டும் இந்திய அணிக்கு வருவார்.

இதனையும் படியுங்கள்: மகளிர் பிரீமியர் லீக் : 5வது வெற்றியை பதிவு செய்தது மும்பை இந்தியன்ஸ்

விளையாட்டு வீரரின் திறமையை அடையாளம் காணும் போட்டியாக டெஸ்ட் போட்டிகள் இருக்கிறது. எனக்கு பிடித்தது டெஸ்ட் கிரிக்கெட் தான்.  திறமையானவர்களை அடையாளம் கண்டு இந்திய அணி நிர்வாகம் வீரர்களை தேர்வு செய்து வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இந்திய அணிக்கு சவால் நிறைந்ததாக இருக்கும்.

 இந்திய அணியில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது சிராஜ் மற்றும் முகமது சாமி உள்ளிட்டவர்களும் சிறந்த பேட்ஸ்மென்களும் உள்ளனர். இந்தியா நிச்சயம் சிறப்பாக விளையாடும். எனினும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இந்திய அணிக்கு சவால் நிறைந்ததாகவே இருக்கும் ” என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து பேச்சாளர் பாலாஜி தெரிவித்துள்ளார்.

– யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.