தமிழகத்தில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் தமிழ் மொழி புறக்கணிப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார்.
வங்கிகளில் உள்ள ஏடிஎம் சேவையை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். வங்கிகளில் சென்று தான் பணம் எடுக்க வேண்டும் என்ற நிலை ஏடிஎம் சேவை வந்த பிறகு மாறியுள்ளது. இதனால் மக்களின் நேரமும் மிச்சமாகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஏடிஎம் சேவையை சாதாரண மக்களும் பயன்படுத்தும் வகையில் மாநில மொழிகளும் அதில் வைக்கப்பட்டுள்ளது. அதன் படி பெரும்பாலான ஏடிஎம் சேவைகளில் இந்தி, ஆங்கிலம் அதனுடன் அந்தந்த மாநிலங்களின் பிராந்திய மொழிகள் இருக்கும்.
Good and Thanks. This was earlier this year, I raised similar complaint for Avaniapuram ATM and made them to correct it. SBI replied and corrected. https://t.co/hG5vhZNSjz
— SundaraMahalingam (@sundar217) November 16, 2022
இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் பயனாளர் சேவைகளுக்கான மொழி தேர்ந்தெடுப்பில் ஆங்கிலம் இந்தி தெலுங்கு மட்டுமே ஏடிஎம் திரையில் காண்பித்த நிலையில், பரவலாக தொடர்ச்சியாக மக்கள் போட்டோ ஆதாரங்களுடன் குற்றம்சாட்டி வந்தனர். இதுகுறித்து ட்விட்டரில் தமிழக நிதியமைச்சரை டேக் செய்து கேள்வி எழுப்பினர்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தமிழகத்தின் அனைத்து வங்கிகளிடமும் நிதித்துறை ஏற்கனவே இந்த பிரச்சனையை குறிப்பிட்டுள்ளது. இது ஒரு அசாதாரண செயல்பாட்டு பிழை. இதுபற்றி எங்கள் துறை செயலாளர்கள் இன்று வங்கியின் கவனத்திற்கு கொண்டு சென்று, சரி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.