கூட்டுறவு துறையில் அரசியல் சார்ந்தவர்கள் இருக்கலாம். ஆனால் அரசியல் இருக்கக் கூடாது என கூறியவர் திமுக தலைவர் கருணாநிதி தான் என அமைச்சர் எ.வ வேலு பேசினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 69ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் எ.வ வேலு கூட்டுறவு வார விழாவில் அமைக்கப்பட்டிருந்த கடைகளை அமைச்சர் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து கூட்டுறவுச் சங்கங்களின் சார்பில் மகளிர்க்காக வழங்கக்கூடிய உதவித்தொகைகள் ஆகியவற்றை அமைச்சர் வழங்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன் பிறகு மேடையில் பேசிய அமைச்சர் எ.வ வேலு, நாட்டில் எதில் ஒற்றுமை இருக்கிறதோ இல்லையோ இந்த கூட்டுறவு விழா நடத்துவதற்கு மக்களிடையே ஒற்றுமை இருக்கிறது எனவும் அதேபோல கூட்டுறவுத் துறையில் அரசியல் சார்ந்தவர்கள் இருக்கலாம். ஆனால் அரசியல் இருக்கக் கூடாது எனக் கூறியவர் திமுக தலைவர் கருணாநிதி தான் என பேசினார்.
அந்த அடிப்படையில் திமுக ஆட்சியில் அமர்ந்த போது அதற்கு முன்னதாக ஆட்சியிலிருந்தவர்கள் பெற்ற கடன் உட்பட 7000 கோடி ரூபாய் கூட்டுறவு கடனை திமுக தலைவர் கருணாநிதி ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தள்ளுபடி செய்தார். அப்போது திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன்பாக இருந்த ஆட்சியில் பயன் பெற்றவர்கள் யாராக இருப்பார்கள் ? என அமைச்சர்கள் கேட்டதற்கு அப்போது தலைவர் கருணாநிதி, யாருடைய ஆட்சியாக இருந்தாலும் விவசாயிகள் என்று பார்த்து ஏழாயிரம் கோடி ரூபாய்க் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறினார்.
இப்படி கூட்டுறவுத் துறையில் அரசியல் சார்ந்தவர்கள் இருக்கலாம் ஆனால் அரசியல் இருக்கக் கூடாது என பொது அடிப்படையில் அனைவருக்கும் சமம் என்ற அடிப்படையில் ஏழாயிரம் கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்தது திமுக தலைவர் கருணாநிதி தான் என மேடையில் பேசினார்.