டி20 உலக்கோப்பை : இறுதிப்போட்டிக்கு முன் தோனி வழங்கிய அறிவுரை….. : சூர்யகுமார் யாதவ்

இந்திய அணியின் கேப்டன் சூர்ய குமார் யாதவ், டி 20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னதாக முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி உடனாக தனது உரையாடல் குறித்து பேசியுள்ளார்.

10 வது ஐசிசி டி 20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் களம் இறங்கிய இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் குவித்தது. பின்னர், இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி 159 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இப்போட்டியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான தோனி மற்றும் ரோகித் ஷர்மா அகியோர் அகமதாபாத் மைதானத்தில் நேரில் கண்டுகளித்தனர்.

இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் சூர்ய குமார் யாதவ், போட்டிக்கு முன்னதாக முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி உடனாக உரையாடல் குறித்து பேசியுள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் சூர்யகுமார் கூறியதாவது ;

போட்டிக்கு முன்பு நான் அவரை (எம்.எஸ். தோனி) சந்தித்தேன். அவர் ஒரு ஐசிசி போட்டியை எவ்வாறு அணுகுவது என்று எனக்கு அறிவுறை கூறினார். நம்மிடம் ஒரு நல்ல அணி இருக்கிறது, நாம் தைரியமாக இருக்க வேண்டும், நாம் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்று தோனி என்னிடம் தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.