ஈரான் போர் ; துபாயிலிருந்து பத்திரமாக நாடு திரும்பிய நடிகர் அஜித்….!

ஈரான் – அமெரிக்கா போரால் துபாயில் சிக்கியிருந்த நடிகர் அஜித் குமார் நாடு திரும்பினார்.

அணு ஆயுதம் தயாரிப்பது தொடர்பாக மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் கூட்டுத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் நாட்டின் உச்ச தலைவர் ஆயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார்.

இதனை தொடர்ந்து இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதனால் துபாயில் சிக்கி உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் முயற்சிகளை மேற்கொள்ள மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டது.

முன்னதாக கார் பந்தயத்தில் கலந்துகொள்ள நடிகர் அஜித் குமார் துபாய் சென்றிருந்தார். இதனால் அஜித்திற்கு என்ன ஆனது என அவரது ரசிகர்கள் கவலை கொண்டனர்.

இந்த நிலையில், இன்று நடிகர் அஜித் துபாயிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அஜித்தை பார்த்த ரசிகர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.