கணவன் மீதான சந்தேகத்தால் 32 வயது ஆண் மீது மனைவி வெந்நீர் ஊற்றியதால் உடல் காயங்களுடன் இருந்தவரை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கம் அருகே உள்ள புதுபட்டு கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கு திருமணம் ஆகி ப்ரியா என்ற மனைவி உள்ளார். இருவருக்கும் திருமணமாகி 7 வருடங்கள் ஆன நிலையில் இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தங்கராஜ் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் தனது அலுவலகத்தில் ஒரு பெண்ணுடன் அடிக்கடி வீடியோ காலில் பேசி வந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முடிந்த நிலையில் தங்கராஜ் தூங்க சென்றுள்ளார். கணவரின் செயலா ல் மன உளைச்சலில் இருந்த ப்ரியா, தங்கராஜ் தூங்கிய போது பிறப்புறுப்பில் வெந்நீர் ஊற்றியுள்ளார். வலியால் துடித்த தங்கராஜ்-ன் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்த போது 50 சதவீதம் உடலில் காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவேரிபாக்கம் போலீசார் ப்ரியா மீது 294, 324 மற்றும் 506 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.







