நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை தி.மு.க. இன்று வெளியிட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க.வின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று மாலை வெளியிடப்பட்டது தி.மு.க. அதில், தூத்துக்குடி, கும்பகோணம், காஞ்சிபுரம் ஆகிய மாநகராட்சிகளுக்கான தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து சுவாமிமலை, பாபநாசம், அய்யம்பேட்டை, அம்மாபேட்டை, திருப்பனந்தாள், திருவிடைமருதூர், ஆடுதுறை, கழுகுமலை, கயத்தார், கடம்பூர், விளாத்திகுளம் ஆகிய பேரூராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியலும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல இடைக்கழிநாடு, விழுப்புரம், கோவில்பட்டி, திருக்கோவிலூர், கோட்டகுப்பம் ஆகிய நகராட்சிகளுக்கும் தி.மு.க. வேட்பாளர் பட்டியலை திமுக அறிவித்தது.
அண்மைச் செய்தி: தமிழ்நாட்டில், 20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று
தற்போது, இரண்டாம் கட்டமாக அரக்கோணம், ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு, வேலூர் மாநகராட்சி, குடியாத்தம், பேரணாம்பட்டு, தஞ்சை, நெல்லை உள்ளிட்ட நகராட்சிகளுக்கு வேட்பாளர்கள் அறிவித்துள்ளது.
தொடர்ந்து உடன்குடி, நசரேத், திருவலம் பென்னாத்தூர், தக்கோலம், நெமிலி, பள்ளிகொண்டா, ஒடுக்கத்தூர், பனப்பாக்கம், காவேரிபாக்கம், விளாப்பாக்கம், அம்மூர் பேரூராட்சிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளிடப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








