மதுரை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன், மகள் ஆகியோர் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் பெரிய இலந்தன்குளம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சுரேகா. இந்த தம்பதியினருக்கு யோகிதா என்ற மகளும், மோகன் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் இன்று காலை குலமங்கலத்தில் குத்தகைக்கு எடுத்துள்ள கொய்யா தோட்டத்தில் உள்ள கிணற்றில் பிணமாக மிதந்துள்ளனர்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது, முருகன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிரிழக்கு போராடி கொண்டிருந்தார். ஆனால், சுரேகா மற்றும் அவரது மகள் யோகிதா, மகன் மோகன் ஆகியோர் உயிரிழந்துவிட்டனர். பின்னர் அவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவர்கள் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்து கொள்வதற்கு முன்பு உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் இவர்கள் உயிரிழந்துவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எதற்கும் உயிரிழப்பு தீர்வாகது என்பதை வலியுறுத்தி நியூஸ்7 தமிழ் பல்வேறு விழிப்புணர்வுகளை முன்னெடுத்து வழங்கி வருகிறது. யாரும் உயிரிழப்பு எண்ணத்தை கையில் எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்..
– இரா.நம்பிராஜன்








