ஸ்டாலின் – ஓபிஎஸ் சந்திப்பு ; திமுகவில் இணைவீர்களா…? என்ற கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காத ஓபிஎஸ்…………!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று சட்டமன்ற வளகாத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார்.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாடு அரசியல் சூடு பிடித்து வருகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையும் என எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக, திடீர் திருப்பமாக நேற்று திமுக கூட்டணியில் இணைந்தது.

இந்த சூழலில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார். சட்டமன்ற வளாகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில்  பன்னீர்செல்வத்தின் மகனும் முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத்தும் உடன் இருந்தார்.

சந்திப்பையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பன்னீர் செல்வம் கூறியதாவது; “திமுகவின் ஐந்து ஆண்டுகால ஆட்சி சிறப்பான ஆட்சிக்கு வாழ்த்து தெரிவித்தேன். சிறப்பான ஆட்சியினால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது. மக்கள் நினைப்பதை தான் எனது ஆதரவு எம்.எல்.ஏ. ஐயப்பன் சட்டமன்றத்தில் பேசியுள்ளார்” என்றார்.

தொடர்ந்து திமுகவில் இணைவீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ஒ. பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவிக்காமல் காரில் ஏறி சென்றார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.