தனுஷ் நடிப்பில் உருவான திருச்சிற்றம்பலம் இன்று வெளியாகிறது!!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் இன்று திரையங்குகளில் வெளியாகிறது. மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘திருச்சிற்றம்பலம்’. இப்படத்தில், தனுஷுடன் ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர்…

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் இன்று திரையங்குகளில் வெளியாகிறது.

மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘திருச்சிற்றம்பலம்’. இப்படத்தில், தனுஷுடன் ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அனிருத் இசையில் சமீபத்தில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நகைச்சுவை மற்றும் காதல் காட்சிகள் நிறைந்த படமாக உருவாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் இந்த படத்தில் நடிகர் தனுஷ் உணவு டெலிவரி செய்யும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சென்னையில் சிறப்பு காட்சிகள் காலை 8 மணிக்கு திரையிடப்படுகிறது. கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத் இணைந்து ரசிகர்களுடன் திருச்சிற்றம்பலம் படத்தை பார்க்க உள்ளனர். கர்ணன் திரைப்படத்திற்கு பிறகு தனுஷ் நடித்துள்ள இந்த படம் திரையரங்கில் வெளியாவதால் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.