திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மகன் சூர்யாசிவா கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜீன்11 ஆம் தேதி உளுந்தூர்பேட்டை அருகே தனியார் ஆம்னி பேருந்தும் – திருச்சி சிவாவின் மகனும் பா.ஜ.க பிரமுகருமான சூர்யாவின் காரும் மோதிக்கொண்ட விபத்தில் சூர்யாவின் கார் சேதமடைந்தது. இதனால், தன் காரில் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பா.ஜ.க பிரமுகர் சூர்யா சிவா அந்த தனியார் பேருந்து நிறுவனத்தின் பேருந்தை எடுத்து சென்று பணம் கேட்டு மிரட்டுவதாகப் பேருந்தின் உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சூர்யாவை கண்டோன்மென்ட் காவல் துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: ‘பாலியல் வன்கொடுமை; வளர்ப்புத் தந்தைக்கு 7 ஆண்டுகள் சிறை’
கைதுக்கு முன்னதாக, திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த வழக்கு தொடர்பாகத் தன்னை சில அமைச்சர்கள் மிரட்டுவதாகவும், தன்னை கைது செய்ய போலீசார் முடிவு செய்திருப்பதாகவும், தனது புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் புதிய புகாரின் பேரில் தன்னை காவல்துறையினர் கைது செய்ய முனைப்புக் காட்டுவதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தகவலறிந்த பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் கட்சியினர் 20-க்கும் மேற்பட்டோர் கண்டோன்மென்ட் காவல் நிலைய முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த கைதுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.