பாலியல் வன்கொடுமை; வளர்ப்புத் தந்தைக்கு 7 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வளர்ப்புத் தந்தைக்கு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கணவரைப் பிரிந்து மகளுடன் வசித்து வந்த ஒரு பெண்ணை, ஷபி…

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வளர்ப்புத் தந்தைக்கு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கணவரைப் பிரிந்து மகளுடன் வசித்து வந்த ஒரு பெண்ணை, ஷபி என்பவர் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இதனிடையே, தான் திருமணம் செய்த பெண்ணின் மகளுக்கு பாலியல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவான வழக்கு ஒன்று சென்னை போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அண்மைச் செய்தி: ‘ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் வருமானம் ரூ. 64 லட்சம்’

இந்த வழக்கை நீதிபதி எம்.ராஜலட்சுமி விசாரித்தார், அப்போது குற்றம் உறுதி செய்யப்பட்டதால், ஷபிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டுமெனத் தமிழ்நாடு அரசு அவர் உத்தரவிட்டர். (பாதிக்கப்பட்டவர் சிறுமி என்பதால், அவர் தொடர்பான எந்த தகவலையும் இங்குப் பதியவில்லை).

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.