தமிழ்நாடு சட்டசபை வளாகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது. சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி சட்டமன்ற குழு தலைவர், கொறடா உள்ளிட்ட பொறுப்புகளை நியமித்தோம்.
மின்னஞ்சல் மூலமாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முழு தகவல்களும் அனுப்பி வைக்கப்பட்டது. அதிமுகவிற்கு துரோகம் விளைவிக்கும் பொருட்டு, எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று, புதிய அரசுக்கு ஆதரவு தெரிவிப்போம் என தெரிவித்துள்ளார்கள். ஆசை வார்த்தை கூறி தமிழக வெற்றி கழகத்தில், அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என கூட்டணியில் இணைத்துள்ளார்கள்.
அதிமுகவில் வெற்றி பெற்று மற்ற கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு துரோகம் செய்துள்ளார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் ஆட்சி என்பது மாறி மாறி வரும். திமுக, அதிமுக என தொடர்ந்து மாறுபட்டு கொண்டே இருக்கும். அதிமுக 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்று சொன்னால் அது மிகப்பெரிய வெற்றி.
திட்டமிட்டு சில முன்னால் அமைச்சர்கள், அமைச்சராக வேண்டும் என்ற ஆசைக்கு, தவறான வழியில் நடந்து செல்கிறார்கள். இது உண்மையாகவே சட்டத்திற்கும் நீதிக்கும் புறம்பான்மையானது. தூய்மையான அரசியல் என்றால் எல்லா இடத்திலும் தூய்மையாக இருக்க வேண்டும். எங்கள் இயக்கத்திற்கு இது போன்று வந்துள்ளது. எல்லா இயக்கத்திற்கும் சோதனை வரும். எத்தனையோ கட்சிகள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளது. ஆரம்ப காலகட்டத்திலேயே தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறார் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்.
சட்டப்படி பொதுச்செயலாளர் தான் சட்டமன்ற குழு தலைவரையும், கொரடாவையும் நியமிக்க வேண்டும். அவர்கள் சொல்வது தான் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு ஆதரவு கொடுக்க வேண்டும். தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றுள்ள தொகுதிகள் 106 மட்டும் தான். திமுக கூட்டணி கட்சிகள் தான் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு கொடுத்து வெற்றி பெற செய்துள்ளார்கள். 66% பேர் இன்னும் தமிழக வெற்றி கழகத்திற்கு எதிர்ப்பாக தான் இருக்கிறார்கள். அதிமுக என்பது வலிமையான இயக்கம், அதற்கேற்றவாறு சட்டமன்ற உறுப்பினர்களை நியமித்தோம். அனைத்து மாவட்ட செயலாளர்களையும் ஆலோசனைப்படி தான் வேட்பாளர்களை நிறுத்தினோம். தனிப்பட்ட முறையில் இருக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.







