51000 ஏக்கர் கோயில் நிலம் அளவிடும் பணி நிறைவு – அமைச்சர் சேகர்பாபு

51000 ஏக்கர் கோவில் நிலம் அளவிடும் பணி நிறைவு பெற்று இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் வியாக்ரபுரீஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான நிலங்களை அளவிடும் பணியினை இந்து சமய…

51000 ஏக்கர் கோவில் நிலம் அளவிடும் பணி நிறைவு பெற்று இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் வியாக்ரபுரீஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான நிலங்களை அளவிடும் பணியினை இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு இன்று துவக்கி வைத்தார். அவருடன் அமைச்சர் தா.மோ. அன்பரசன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர்த்தி, காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

முன்னதாக திருப்புலிவனம் வியாக்ரபுரீஸ்வரர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர், இந்து சமைய அறநிலையத் துறையின் பெயர் பொறிக்கப்பட்ட எல்லை கல்லை நட்டு வைத்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், திராவிட முன்னேற்றக் கழக அரசு பொறுப்பேற்ற உடன் திருக்கோயில்கள் என்றாலும், திருப்பணிகள் என்றாலும், திருத்தேர் என்றாலும், பல்வேறு கட்டமைப்பு வசதிகளை செய்வதற்கான ஏற்பாடுகள் முதலமைச்சரின் ஆலோசனை படி நடந்து வருவதாக தெரிவித்தார்.

திருக்கோயிலுக்கு சொந்தமான பல்வேறு ஆவணங்களை பதிவேற்றம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருவதாக கூறினார். மேலும், கோயிலுக்கு சொந்தமான சொத்துகளை பாதுகாக்கும் வகையில் ரோவர் கருவி மூலம் அளவிடும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர், திருப்புலிவனம் ஈஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 9.27 ஏக்கர் நிலங்கள் அளவிடும் பணி இன்று தொடங்கி இருப்பதாக குறிப்பிட்டார்.

அண்மைச் செய்தி: ‘சிறுமியை காதலிக்கும்படி வற்புறுத்திய 2 பேருக்கு ஜாமீன் மறுப்பு – மதுரை உய்நீதிமன்ற கிளை’

மேலும், இதுவரை 51000 ஏக்கர் கோவில் நிலங்கள் அளவிடும் பணி நிறைவடைந்து இருக்கிறது என தெரிவித்த அவர், தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி காலத்தில் இதுவும் ஒரு ஆன்மீகப் புரட்சி என்றே கூறலாம் என குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், இந்த அளவிடும் பணிக்காக 150 நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

20 மண்டலங்களில் 50 குழுக்களாக பிரித்து இந்த அளவிடும் பணி தற்போது நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர், மேலும் 100 குழுக்களாக விரிவாக்கம் செய்து விரைந்து இந்தப் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். அதனைத்தொடர்ந்து, உத்திரமேரூர் ஸ்ரீவைகுண்ட பெருமாள் கோவில் மற்றும் ஸ்ரீபாலசுப்ரமணியர் கோவில் உள்பட பல்வேறு கோவில்கலை அவர் ஆய்வு செய்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.