சிறுமியை காதலிக்கும்படி வற்புறுத்திய 2 பேருக்கு ஜாமீன் மறுப்பு

சிறுமியை காதலிக்கும்படி வற்புறுத்திய 2 பேருக்கு ஜாமீன் தர மறுப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் வள்ளியூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை அதே…

சிறுமியை காதலிக்கும்படி வற்புறுத்திய 2 பேருக்கு ஜாமீன் தர மறுப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர், தனது நண்பருடன் சேர்ந்து பொது இடத்தில் வைத்து தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு அந்த சிறுமி, மறுத்ததால் அவரது கையைப்பிடித்து இழுத்து தகாத வார்த்தைகளால் அந்த இளைஞர் திட்டியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அந்த சிறுமி மற்றும் அவரது பெற்றோர் அளித்த புகாரின்பேரில் வள்ளியூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து பாரத் மற்றும் மகாராஜா என்ற இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்டு உள்ள இருவரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

அண்மைச் செய்தி: ‘குஜராத்தில் நடைபெறும் கல்வி அமைச்சர்கள் மாநாடு; புறக்கணித்த தமிழ்நாடு’

இந்த வழக்கு இன்று நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டு மிக தீவிரமானது என்பதால், அவர்களுக்கு ஜாமீன் வழங்க இயலாது என கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.