ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கலாம்: மத்திய அரசு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் அனுமதி வழங்கலாம், என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் அனுமதி வழங்கலாம், என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் தொற்று பாதித்தவர்களை உயிரைகாக்க ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தொடர்பான அனைத்து வழக்குகளையும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தாமாக முன்வந்து விசாரித்தது. அப்போது, கொரோனா காலம் என்பதால், நாடு முழுவதும் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதாக, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா குறிப்பிட்டார். எனவே, யார் ஆக்சிஜன் உற்பத்தி செய்து தந்தாலும், மத்திய அரசு வாங்க தயாராக உள்ளதாகவும், அவர் கூறினார்.

அந்தவகையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் அனுமதி வழங்கலாம் என்றும், மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார். இதையடுத்து ஆக்சிஜன் தயாரிப்பு குறித்த வழக்கு நாளை விசாரிக்கப்படும், என தலைமை நீதிபதி அமர்வு அறிவித்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.