இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்று தொடர் வெற்றியை பதிவு செய்யுமா என்பது பெங்களூரு ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் போட்டி கடந்த 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மும்பை வான்கடே மைதானத்தில் பலப்பரிட்சையில் ஈடுபட உள்ளது. இதுவரை பெங்களூரு அணி 3 போட்டிகளில் பங்கேற்றி மூன்றிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 3 போட்டிகளில் பங்கேற்றி 1ல் மட்டும் வெற்றி பெற்று 7வது இடத்தில் உள்ளது.
இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் 22 போட்டிகளில் பங்கேற்று தலா 10 போட்டிகளில் இரு அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. இரு போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை. இதனால், இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு இரு அணி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.







