தூத்துக்குடி சிப்காட் பகுதியில் பயங்கர தீ விபத்து!

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிப்காட் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் காணப்படுகிறது. 7 தீயணைப்பு…

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சிப்காட் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் காணப்படுகிறது. 7 தீயணைப்பு வாகனத்தில் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் முயன்று வருகின்றனர். மேலும், நிறுவனத்தின் உள்ளே யாரேனும் சிக்கியுள்ளார்களா என தகவல்கள் தெரியவில்லை. தீயை முழுமையாக அணைத்த பின்னரே இது குறித்த தகவல்கள் தெரிய வரும் என கூறப்படுகின்றது.

இந்த தீ விபத்தினால் ரூ.10 கோடி மதிப்பிலான துணிகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.