ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “த.வெ.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.
இந்த ஆட்சி வரவேண்டும் என வாக்களித்தவர்களே இந்த ஆட்சி எப்போது ஒழியும் என நினைக்கின்றனர். சிறுமிகள் தொடர்ந்து காணாமல் போகும் சம்பவங்கள் நடக்கின்றன. கோட்டு சூட்டு போட்டுக்கொண்டு ஆபிஸுக்கு செல்வதுபோல் வந்து விட்டு மாலை 6 மணிக்கு வீட்டுக்கு சென்றுவிடுகிறார். நெருக்கடி நிலை, தடை, பொடா உள்ளிட்ட சட்டங்களை எதிர்கொண்டவர்கள், இதற்கெல்லாம் அஞ்ச மாட்டோம் என்றார்.
தொடர்ந்து இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவா? என்ற கேள்விக்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், “முதலில் தேர்தல் தேதி அறிவிக்கட்டும். அதன் பிறகு அதுபற்றி முடிவெடுப்போம்” என்று பதிலளித்துள்ளார்




