தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினர் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “ஆன்மீகப் பற்றும், தேசப்பற்றும், மக்கள் நலச் சிந்தனையும் ஒருங்கே கொண்ட தெய்வத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி விழா இன்று!
விடுதலைப் போராட்டத்தில் பங்காற்றி, சமூக ஒற்றுமை, வீர உணர்வு, தியாகம் ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்தவர் தேவர் திருமகனார். அவரது துணிச்சலும், கொள்கைப் பற்றும், தன்னலமற்ற பொதுவாழ்வும் தலைமுறைகள் பலவற்றிற்கு என்றும் வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கின்றன.
அவரது உயரிய சிந்தனைகளையும், மக்கள் நலன் சார்ந்த பணிகளையும் போற்றி, அவர் காட்டிய பாதையில் தேசத்திற்கும் மக்களுக்கும் தொண்டாற்றுவோம். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




