ஓமன் நாட்டில் தவிக்கும் தமிழர்கள்; மீட்கக்கோரி ஆட்சியரிடம் மனு

சம்பளம் கேட்டால் கொளுத்திவிடுவதாகவும், துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விடுவேன் என்று மிரட்டல் விடுப்பதாகவும் சம்பளமின்றி ஓமன் நாட்டில் தவிக்கும்  தமிழர்களை மீட்க மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கடலூர் அடுத்த பெரிய காரைக்காடு பகுதியை சேர்ந்த…

சம்பளம் கேட்டால் கொளுத்திவிடுவதாகவும், துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விடுவேன் என்று மிரட்டல் விடுப்பதாகவும் சம்பளமின்றி ஓமன் நாட்டில் தவிக்கும்  தமிழர்களை மீட்க மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கடலூர் அடுத்த பெரிய காரைக்காடு பகுதியை சேர்ந்த செல்வரங்கன்,குணா மற்றும் பிரசாந்த் ஆகியோர் 55ஆயிரம் சம்பளத்திற்கு ஓமன் நாட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் வெல்டர் வேலைக்காக திருச்சியில் உள்ள தனியார் ஏஜென்சி மூலம் கடந்த மே மாதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மூன்று மாதமாக அவர்கள் பணி செய்து வந்துள்ளனர், ஆனால், இதுவரை சம்பளம் கொடுக்க நிறுவனம் மறுப்பதாகவும், மேலும் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விடுவதாகவும், துப்பாக்கியால் சுட்டுவிடுவதாக மிரட்டல் விடுக்கின்றனர். அதையும் மீறி, செல்ல வேண்டும் என்றால் தலா 2லட்சம் பணத்தை கட்டி செல்ல வேண்டும் என வலியுறுத்துவதாகவும் கூறியுள்ளனர்.

எனவே அவர்களை உடனடியாக மீட்க கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவரது மனைவி உறவினர்கள் மனு அளித்துள்ளனர். மேலும் ஓமன் நாட்டில் சிக்கியுள்ள நபர்கள் உடனடியாக மீட்க கோரி வீடியோ மூலமாகவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.