சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் வெளியாகிய நான்கு நாட்களில் ரூ. 50.56 கோடி வசூலைக் குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிம்பு நடித்துள்ள திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. எழுத்தாளர் ஜெயமோகன் கதையை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. சித்திகி இத்னானி கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஐசரி கணேசன் தயாரித்துள்ள படத்தில் ராதிகா சரத்குமார், மலையாள நடிகர் சித்திக், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இத்திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படம் வெளியாகிய முதல் நாள் ரூ. 10.86 கோடி வசூலை ஈட்டியதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், படம் வெளியான நான்கு நாட்களில் ரூ. 50.56 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 30 கோடியில் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் இப்படம் கடந்த நான்கு நாட்களில் பட்ஜெட்டைத் தாண்டிய வசூலை குவித்துள்ளது.