பிரபல உணவகத்தில் சூப்பில் இறந்து கிடந்த ஈ ; வாடிகையாளர்கள் அதிர்ச்சி

திருவண்ணாமலையில் இயங்கி வரும் பிரபல ஹோட்டலில் வாடிக்கையாளருக்கு அளிக்கப்பட்ட சூப்பில் ஈ இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் அடையார் ஆனந்த பவன் என்ற பிரபல ஹோட்டல் இயங்கி வருகிறது. இந்த…

திருவண்ணாமலையில் இயங்கி வரும் பிரபல ஹோட்டலில் வாடிக்கையாளருக்கு அளிக்கப்பட்ட சூப்பில் ஈ இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் அடையார் ஆனந்த பவன் என்ற பிரபல ஹோட்டல் இயங்கி வருகிறது. இந்த ஹோட்டலில் நேற்று முன்தினம் சனிக்கிழமை அன்று உணவு அருந்த வந்த வாடிக்கையாளருக்கு சூப் வழங்கப்பட்டது. அந்த சூப்பில் ஈ இறந்து கிடந்ததை கண்டு வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்தார்.


கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சைவ ஹோட்டலில் பீட்ரூட் பொறியலில் எலி தலையுடன் கூடிய உணவு வழங்கப்பட்டதால், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு சைவம் மற்றும் அசைவ ஹோட்டல்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருவது அப்பகுதியில் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனால், மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.