உலக வனவிலங்குகள் தினத்தை முன்னிட்டு கடலூரில் பள்ளி மாணவர்கள் புலியின் மணல் சிற்பத்தை உருவாக்கி அசத்தியுள்ளனர்.
உலக காடுகள் அழிவுகளை தடுக்க வலியுறுத்தியும், பல வன விலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்க வேண்டும் என்பதை விளக்கும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 3 ம் தேதி வன விலங்குகள் தினம் கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு கடலூர் அரசு பள்ளி மாணவர்கள் வன விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தேசிய விலங்கான புலியின் உருவத்தை மணலில் தத்துருவமாக வரைந்துள்ளனர்.
சுமார் 5 அடி அகலுமும், 2 அடி உயரமும் உடைய புலியின் சிற்பம் செயின்ட் டேவிட் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. காண்போரை வியப்பில் ஆழ்த்தும் இச்சிற்பத்தை ஏராளமான மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
–வேந்தன்







