மதுரை-திருமங்கலம் இடையேப் புதியதாகக் கட்டப்பட்ட அகல ரயில் பாதையில், அதிவேக ரயிலை இயக்கிச் சோதனை நடத்தப்பட்டது.
மதுரை-திருமங்கலம் இடையே 17 கி.மீ. தொலைவுக்கு இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் அண்மையில் நிறைவடைந்தன. இந்த நிலையில் புதிய ரயில் பாதையில் கடந்த மாதம் 13, 14 ஆகிய தேதிகளில் திருமங்கலம்-ஹாா்விபட்டி இடையே அதிவேக ரயில் இயக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
இதன் தொடா்ச்சியாக மதுரை – திருமங்கலம் ,புதிய அகல ரயில் பாதையில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம், நேற்று இரவு நடைபெற்றது. மதுரை ரயில் நிலையத்தில் இருந்து இரவு 8.12 மணிக்குப் புறப்பட்ட இந்த ரயில், 8.38 மணிக்கு திருமங்கலத்தைச் சென்றடைந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னா், அங்கிருந்து 8.49 மணிக்குப் புறப்பட்டச் சோதனை ரயில், இரவு 9.13 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தை வந்து அடைந்தது. இதில், தெற்கு ரயில்வேக் கட்டுமானப் பிரிவு முதன்மை நிா்வாக அலுவலா் வி.கே. குப்தா, வேகச் சோதனை ரயிலில் பயணித்து புதிய ரயில் பாதையின் தரம், பாதுகாப்புக் குறித்து ஆய்வு செய்தாா். மேலும் , விகாஸ் நிகாம் நிறுவனத் திட்ட முதன்மை மேளாளா் வி. கமலாகர ரெட்டி, மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளா் பத்மநாதன் அனந்த், ஆகியோா் இந்த நிகழ்வில் பங்கேற்றனா்.
–கா. ருபி