ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நடைபெற்ற 7-ம் நாள் தேரோட்ட திருவிழாவில் சயன சேவை சிறப்பாக நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா கடந்த ஜூலை
14 ம் தேதி தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இதனை முன்னிட்டு ஆண்டாளும், ரெங்கமன்னாரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்று வருகிறது. இதனைதொடா்ந்து முக்கிய நிகழ்ச்சியான 7ம் திருநாளில் ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோயிலில் உள்ள முன் மண்டபத்தில் இரவு சயன சேவை நடைபெற்றது. பின்னா் ஆண்டாள் மடியில், ரெங்கமன்னார் சயனித்திருக்கும்
கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட திருவிழா வரும் 22ம் தேதி நடைபெறுகிறது. மேலும் பாதுகாப்பில் ஏராளமான போலீசாா் ஈடுபட்டுள்ளனர்.
ரூபி.காமராஜ்








