விமரிசையாக நடைபெற்ற ஸ்ரீவெங்கடாசலபதி பெருமாள் கோயில் கருடசேவை!

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடாசலபதி பெருமாள் கோயிலில், சித்ரா பெளா்ணமி  திருவிழாவின் 5ம் நாள் கருட சேவையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரை ஓரம்…

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடாசலபதி பெருமாள் கோயிலில், சித்ரா பெளா்ணமி  திருவிழாவின் 5ம் நாள் கருட சேவையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரை ஓரம் குன்றின் மேல் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடாசலபதி திருக்கோயில் கருங்குளம் என்னும் வகுளகிாி சேத்திரம் என அழைக்கப்படுகின்றது. திருப்பதி மலையில் தோ் செய்து மீதி இருந்த 2 கட்டைகள் இங்கு பிரதிஷ்டை செய்து சாப விமோசனம் பெற்றதாக வரலாறு.அதன்படி அக்கட்டைகளை ஸ்ரீ வெங்கடாசலபதியாக பக்தா்கள் வழிபட்டு வரும் நிலையில் இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பெளா்ணமி விழா சிறப்பாக 10 நாட்கள் நடைபெற்று விழா காலங்களில் சுவாமி ஸ்ரீசீனிவாசா் பல்வேறு வாகனங்களில் ஏழுந்தருளி மலை மீது வலம் வருகின்றாா்.

அந்த வகையில்  5ம்திருநாள்  கருட சேவையில்  காலை கோயில் நடை திறக்கப்பட்டதும் 108 கலசங்கள் வைத்து பூஜைகள் நடைபெற்றன. பூா்ணாகுதியை தொடா்ந்து சுவாமிக்கு 16 வகை பொருட்கள் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் அலங்காரம், மகா ஆரத்தி நடைபெற்று இரவில் ஸ்ரீசினிவாச பெருமாள் தன் வாகனமான வைனதேயன் என்ற கருடாழ்வாா் மீது அமா்ந்து பக்தா்களுக்கு காட்சிகொடுத்தாா். பின்னா், குடைவரை வாயில் தீபாராதனை முடிந்து கருடசேவை புறப்பாடு நடைபெற்று, திருக்கோயிலின் வெளியே குடைகள் சாற்றப்பட்டு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

ஸ்ரீ வெங்கடாசலபதி சுவாமிக்கு ஜே என்ற கோஷங்களோடு மலை மீது 2 முறை சுவாமி வலம் வந்தாா். இந்நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தா்கள் கண்டு அருள்பெற்றனா்.

ரூபி.கா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.