முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழர்கள் மீது அக்கறை கொண்ட தலைவராக அண்ணாமலையை பார்க்க முடியவில்லை: இயக்குநர் அமீர்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழர்கள் மீதும், தமிழ்த்தாய் வாழ்த்து மீதும் அக்கறை கொண்ட தலைவர் கிடையாது என்று திரைப்பட இயக்குநர் அமீர் விமர்சித்துள்ளார்.

கரூர் மாவட்டம், பள்ளபட்டியில் பிரெண்ட்ஸ் பெடரேஷன் என்ற தன்னார்வ அமைப்பின் சார்பில், குற்ற செயல்களை தடுக்கவும், கண்காணிக்கவும் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக 100 சிசிடிவி கேமராக்கள் அர்ப்பணிக்கும் நிகழ்வு தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் டிபிஜி ரவி, திரைப்பட இயக்குனர் அமீர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் 100 சிசிடிவி கேமராக்களை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய திரைப்பட இயக்குனர் அமீர், நடந்து முடிந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் மாற்றம் வேண்டும் என்பதற்காக நடந்துள்ளது. இந்த தேர்தலும் சாதாரண பொது தேர்தல் போல மாறிவிட்டது. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து வெறுப்பு பேச்சுகளை பேசுபவர்கள் மீது அரசு வழக்கு தொடர வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. குறிப்பிட்ட சமூகத்தினர் மீது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக தவறான கருத்துக்களை பலரும் பேசி வருகின்றனர். இந்தியா என்பது ஒரு கூட்டமைப்பு. தேசிய கட்சியின் ஆதரவோடு சிலர் தவறான கருத்துக்களை பேசி வருகின்றனர். இத்தகைய செயலை தான் பாசிசம் என்று குறிப்பிட்டேன்.

அண்ணாமலை தமிழர்கள் மீது அக்கறை கொண்ட தலைவர் கிடையாது. ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று சொல்லிவிட்டு, சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார். அவர் எந்த காலத்திலும் தமிழர்கள் மீதும், தமிழ்த்தாய் வாழ்த்து மீதும் அக்கறை கொண்டவராக என்னால் பார்க்க முடியவில்லை என தெரிவித்தார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நாமக்கல் : காலபைரவர் ஆலயத்தில் வளர்பிறை அஷ்டமி விழா – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

Web Editor

தேசிய அரசியலுக்கு வந்துவிட்டதாக முதலமைச்சர் கூறுவதை ஏற்க முடியாது: அண்ணாமலை

Web Editor

பருவமழையை முன்னெச்சரிக்கை: சிறப்பு அலுவலர்களை நியமித்தது குடிநீர் வாரியம்

EZHILARASAN D