குடியாத்தம் அருகே பிறந்த சில மணி நேரமே ஆன பெண் சிசுவை தொப்புள் கொடியுடன் வீசி சென்ற தாய் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு முஹமதலி – 1 வது தெருவில் புதியதாக கட்டப்பட்டுள்ள தரைப்பாலம் அருகில் வசித்து வரும் ஜூஹாதஸ்கீன் என்பவர் வாசப்படி அருகில் ஒரு பெண் குழந்தை அழுது கொண்டிருந்த சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்த போது பிறந்த சில மணி நேரம் ஆன பெண் சிசு என தெரிய வந்தது.
தகவலறிந்த அப்பகுதி கவுன்சிலர் சுல்தானா அப்துல் பாசித் உடனடியாக சிசுவை மீட்டு பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
பின்னா், போலீசில் ஒப்படைக்கப்பட்ட பெண் குழந்தை உடனடியாக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து பேரணாம்பட்டு போலீசார், பெண் குழந்தையை தவிக்க விட்டு போன கல் நெஞ்சம் படைத்த தாய் யார்? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
—-ரூபி.காமராஜ்







