பாமக (அன்புமணி) வழக்கறிஞர் பாலு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது ;
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட அளவிலான அனைத்து நிலை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை மே 19-ஆம் நாள் காலை 10.00 மணிக்கு சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள அருள்முருகன் டவர்ஸ் அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்திற்கு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையேற்கவுள்ளார்.
இந்த நிகழ்ச்சி குறித்து செய்தி சேகரிப்பதற்காக தங்களின் ஊடகத்திலிருந்து செய்தியாளரையும், ஒளிப்பதிவாளர்/ புகைப்படக் கலைஞரையும் அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







