ஸ்ரீபெரும்புதூரில் ஸ்ரீ ராமானுஜரின் 1006 ஆவது அவதார பிரம்மோற்சவம் மங்களகிரி வைபவத்துடன் துவங்கிய நிலையில், வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் உள்ளது. இந்த திருக்கோவிலுக்கு பூதபுரி ஷேத்ரம் என்ற பெயரும் உண்டு. இத்திருக்கோயிலில் தான் வைணவத்தில் பிறந்து பல சீர்திருத்தங்களை மேற்கொண்ட ராமானுஜர் சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திர நாளன்று 1017 ஆம் ஆண்டு பிறந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றனா். இந்த ஆண்டு ராமானுஜரின் 1006 வது அவதார பிரமோற்சவம் துவங்கிய நிலையில், மங்களகிரி வைபவம் நடைபெற்று அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஸ்ரீ ராமானுஜர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பின்னா் ஸ்ரீபெரும்புதூர் நகரின் தேரடி சாலை, காந்தி சாலை என முக்கிய வீதிகளின் வழியாக சென்று திருக்கோவிலை வந்தடைந்தாா். மேலும் ராமானுஜரின் மங்களகிரி வைபவத்தை வழிநெடுகிலும் பெருந்திரளான மக்கள் தரிசனம் செய்தனர்.
—-ரூபி.காமராஜ்







