வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல்: ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!

வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுதுறை மீனவ கிராமத்தில் இருந்து நேற்று மதியம் விமலா என்பவருக்கு சொந்தமான பைபர்…

வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுதுறை மீனவ கிராமத்தில் இருந்து
நேற்று மதியம் விமலா என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் ஆறுகாட்டுத்துறையைச்
சார்ந்த பாக்யராஜ், அமுதகுமார், அன்பழகன், சாணக்கியன், நாகராஜ் ஆகிய 5 பேர்
மீன்பிடிக்க கடலுக்குச் சென்று கோடியக்கரைக்கு தென்கிழக்கே வலை விரித்து
மீன்பிடித்துக் கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது இலங்கையைச் சேர்ந்த 5 கடற்கொள்ளையர்கள் இவர்களது படகை வழிமறித்து
படகில் ஏறி கத்தி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். பிறகு படையில் இருந்த ஜீ.பி.எஸ். கருவி , 20 கிலோ மீன், செல்போன், டார்ச் லைட் உள்ளிட்ட பொருட்களையும், மீன்பிடி வலைகலையும் வெட்டி எடுத்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர். பின்னர், 5 மீனவர்களும் அவசரமாக கரைக்கு திரும்பினர்.

இதையும் படியுங்கள் : பாரிஸ் ஒலிம்பிக் : ஒரு கிலோவில் பறிபோன பதக்கம் – 4வது இடம்பிடித்தார் மீராபாய் சானு!

இதில், தலையில் காயமடைந்த அன்பழகன் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். மற்ற நான்கு மீனவர்களும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.