பாமக சட்டமன்றக் குழு தலைவராக சௌமியா அன்புமணி தேர்வு!

பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவராக சௌமியா அன்புமணி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

பாமக சட்டமன்ற குழு தலைவராக சௌமியா அன்புமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான கடிதத்தை சட்டசபை செயலாளர் கே.சீனிவாசனுக்கு பாமக தலைவர் அன்புமணி அனுப்பி உள்ளார்.

அதில், “2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் 11.05.2026 திங்கள்கிழமை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தருமபுரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் முனைவர். சௌமியா அன்புமணி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்.

சட்டப்பேரவைக் கட்சியின் துணைத் தலைவராக செஞ்சி சட்டப்பேரவை உறுப்பினர் முனைவர் அ.கணேஷ்குமார், கொறடாவாக விக்கிரவாண்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ச.சிவக்குமார் அவர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.