IPL2026 | பஞ்சாப்பை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி!

பஞ்சாப் அணிக்கு அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

19 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு இமாசலபிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் நடைபெற்ற 55-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் – டெல்லி அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாஸை வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக பிரியான்ஷ் ஆர்யா மற்றும் ப்ரம்சிம்ரன் சிங் களமிறங்கினர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.

அந்த அணியின் சார்பில் முதலாவதாக கே.எல்.ராகுல் மற்றும் அபிஷேக் போரல் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் அபிஷேக் போரல் 5 ரன்னிலும், கே.எ.ராகுல் 9 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய ஷாகில் பரகத் 13 ரன்களும், ஸ்டப்ஸ் 12 ரன்களும் எடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர். போட்டியின் முடிவில் டெல்லி அணி 19 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றிபெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.