காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளை இன்று அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி முன்னெடுத்துள்ள ஒற்றுமை நடைபயணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் நிலையில், சோனியா காந்தி இரண்டு நாள் பயணமாக ஜெய்பூர் சென்றுள்ளார். தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருக்கும் அவருக்கு, அங்கேயே பிறந்தநாள் விழா கொண்டாடப்படும் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், பிரதமர் மோடி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சோனியா காந்தி நீண்ட காலம் உடல் ஆரோக்கியத்துடன் வாழ பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார். மேலும், சோனியா காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
இதேபோல், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவருமான சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். மேலும், சோனியா காந்திக்கு மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள் எனவும் பதிவிட்டுள்ளார்.