கஜா பார்ட் 2 ; வர்தா பார்ட் 2 என்கிற சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் தகவல்கள் உண்மையா ? உண்மையில் தற்போது அந்த அளவிற்கு நெருக்கடி உள்ளதா ? பார்ப்போம்…
மாண்டஸ் தீவிர சூறாவளி புயல் இன்று நள்ளிரவு மகாபலிபுரம் பகுதியை ஒட்டி கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னைக்குத் தென்கிழக்கு 260 கிலோ மீட்டர் (அதிகாலை 11:00 மணி நிலவரம்) தொலைவில் தற்போது மாண்டஸ் தீவிர சூறாவளி புயலானது நிலை கொண்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் தொடர்ந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஸ்ரீஹரி கோட்டா விற்கும் புதுவைக்கும் இடையே மகாபலிபுரத்தை ஒட்டி கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் குறித்த பிரதேச செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளது.
தற்போது தீவிர புயலாக இருந்தாலும் கரையைக் கடக்கும் போது புயலாகக் கரையைக் கடக்கும் என்பதால் காற்றின் வேகம் சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சென்னைக்குத் தான் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கஜா – வர்தா போன்ற புயல்கள் அதி தீவிர சூறாவளி புயலாகக் கரையைக் கடந்து. வர்தா புயல் அதிகபட்சமாக 130 கி.மீ வரை காற்றின் பதிவாகி வேகம் இருந்தது. கஜா புயல் அதிகபட்சமாக 135 கி.மீ வரை காற்றின் வேகம் பதிவாகி இருந்தது. இந்நிலையில் மாண்டஸ் கரையைக் கடக்கும் போது காற்றின் வேகம் 85 கி.மீ வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் ’வராண்டா வராண்டா’ தூள் கிளப்பு போகும் கஜா பார்ட் – 2
போன்ற பொய்யான தகவல்களால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,
கடலூர், புதுவை போன்ற பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் பயத்தில் உள்ளனர். வானிலை முன் கணிப்புகள் என்பது பெரும்பாலான நேரங்களில் மாற்றத்திற்கு உட்பட்டவை என்பதால் தான் வாய்ப்பு என்கிற வார்த்தையை 100% முன்னறிவிப்பில் பயன்படுத்துகின்றனர்.
வானிலை ஆய்வு மையத்தின் செய்தி அந்த அளவிற்கு முக்கியமானதா ?
காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாகக் கரையைக் கடக்கும் போது அதீத கனமழை இருக்கும். காற்றின் வேகம் 110 கிலோமீட்டர் வேகத்திற்கு வீசும். வட தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இப்படி பல முன்னறிவிப்பு வானிலை ஆய்வு மையத்திலிருந்து வழங்கப்பட்டிருக்கும் ஆனால் நடந்த நிகழ்வு இப்படி இருக்காது. அதற்காகப் பொதுமக்களும் அரசு கட்டமைப்பும் அலட்சியத்துடன் இருந்தால் அதன் பின் விளைவுகள் எதிர்பார்ப்பதை விட மிக மோசமாக இருக்கும் என்பதே உண்மை.
வர்தா புயல் சென்னையைத் தாக்கிய போது சென்னைக்கு நிழல் கொடுத்த லட்சக்கணக்கான மரங்கள் ஒரே நாளில் வேரோடு சாய்ந்தது. அதிகபட்சமாக 120 கிலோ மீட்டர் வேகத்திற்குப் புயல் காற்று இருந்தது. ஆனால் எந்த ஒரு உயிரிழப்பும் இல்லாமல்
மக்களைப் பாதுகாக்க வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பும் தமிழக அரசின் சிறந்த செயல்பாடும் மட்டுமே காரணமாக அமைந்தது.
ஒக்கி புயலின் போது வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பை மத்திய மாநில
அரசுகள் சற்று அலட்சியத்தோடு கையாண்டதால் எண்ணற்ற மீனவர்களை இழந்தோம் என்பது வானிலை ஆய்வாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்து.
புயல் – பெருவெள்ளம் போன்ற நேரங்களில் அரசு என்கிற கட்டமைப்பு சக்கரம் மக்களை
காப்பாற்றப் புயலை விட வேகமாகச் சுழலுவதற்குக் காரணம் வானிலை மையத்தின் தகவல்கள் தான்.
1. புயல் மற்றும் அதிக கன மழை எச்சரிக்கையின் போது என்னதான் செய்ய வேண்டும்.
2. பிரட், பிஸ்கட், மெழுகுவர்த்தியைக் கண்டிப்பாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்
என்பது அவ்வளவு பெரிய அறிவுடைமை தகவல் எல்லாம் அல்ல.
3. அதிகமான காற்று மழையின் போது வெளியே செல்லாமல் பயணங்களைத் தவிர்த்து விட்டுப் பாதுகாப்பாக வீட்டில் இருப்பது தான் மிக முக்கியம்.
4. குடிசை அல்லது தகரத்தால் ஆன வீடுகளில் உள்ளவர்கள் தங்கள் வீட்டை விட்டு
வெளியே வர மாட்டோம் என்று அடம் பிடிக்காமல் அரசு ஏற்பாடு செய்திருக்கும்
முகாம்களுக்குச் சென்று தங்க வேண்டும்.
5. மீனவர்கள் பாதுகாப்பாகக் கரை திரும்பக் கரையில் உள்ள மீனவ குடும்பங்கள் மற்றும்
சமூக அமைப்புகள் அவர்களுக்கு உரியத் தகவல்களைக் கொடுத்து கரைக்கு வருவதற்கு
உதவி செய்ய வேண்டும்.
6. எல்லாவற்றையும் தாண்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகும் தகவல்களை நம்பாமல் அரசு கூறும் தகவல்களுக்கு மட்டும் காது கொடுக்க வேண்டும்.