‘Biryani is unbeatable’ புத்தாண்டு கொண்டாட்டத்தில் அசர வைத்த புக்கிங்!

உணவு விநியோக நிறுவனமான சொமேட்டோ புத்தாண்டிற்கு முதல் நாள் அன்று அதிக ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.  இதில் பிரியாணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.  பண்டிகை கால உணவாகக் கருதப்பட்ட பிரியாணி இப்போது அன்றாட…

உணவு விநியோக நிறுவனமான சொமேட்டோ புத்தாண்டிற்கு முதல் நாள் அன்று அதிக ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.  இதில் பிரியாணி முதலிடத்தைப் பிடித்துள்ளது. 

பண்டிகை கால உணவாகக் கருதப்பட்ட பிரியாணி இப்போது அன்றாட உணவுகளில் ஒன்றாகி விட்டது.  பிரியாணி விரும்பிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். அதிக பேர் விரும்பி சாப்பிடும் உணவகளில் பிரியாணியே என்றும் முதலிடம் பிடிக்கிறது. அந்த அளவு பிரியாணி உணவு பிரியர்களை தன் வசப்படுத்தியுள்ளது.  பிரியாணி, பிரியாணி,  பிரியாணி என எங்கு பார்த்தாலும் பிரியாணி கடைகளே தென்படுகின்றன. இந்த பொறப்பு தான் நல்லா ருசிச்சு சாப்பிட கெடச்சது என்ற பாடல் வரிகளுக்கு ஏற்றவாறு பலருக்கு பல உணவுகள் பிடித்தாலும்,  அதில் பிரியாணிக்கே முதலிடம்.

புத்தாண்டிற்கு முதல் நாள் அன்று அதவாது டிசம்பர் 31-ந் தேதி அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலை வீடியோவாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது சொமேட்டோ . இதில் பிரியாணியே முதலிடம் பிடித்துள்ளது.  சொமேட்டோவின் பதிவில் பிரியாணியை எப்போதும் யாராலும் தோற்கடிக்க முடியாது என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.  இந்த வீடியோ பதிவு செய்த சில மணி நேரத்திலேயே லட்சக்கணக்கான பார்வையாளர்ளகளை கடந்துள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.